கிவ் நகருக்கு அருகில் உள்ள மைலா (Myla) கிராமத்தில் உள்ள ஆயுதக் கிடங்கு மீது நடத்தப்பட்ட ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்தத் தாக்குதலால், அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள், கண்ணிவெடிகள் மற்றும் ஆளில்லா விமானப் (drone) பாகங்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இந்த கோர விபத்தால் அப்பகுதியில் உள்ள சுமார் 130 வீடுகளும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகமும் கடுமையாக சேதமடைந்தன.
குடியிருப்புப் பகுதிக்கு அருகில் ஆயுதக் கிடங்கை அமைத்தது "நிச்சயமாக அங்கே இருக்கக் கூடாது" என்று அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கடுமையாகக் கண்டித்துள்ளார். மேலும், இதுகுறித்து உத்தியோகபூர்வ அலட்சியத்தின் (Official Negligence) கீழ் கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கீவ் மற்றும் உக்ரைனின் பிற பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பிராந்தியங்களிலும் பொதுமக்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.