ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ராட்சத கணவாய் இனப்பெருக்க நிகழ்வு இந்த ஆண்டு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது

ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகின் மிகப்பெரிய ராட்சத கணவாய் (Giant Cuttlefish) இனப்பெருக்க நிகழ்வு இந்த ஆண்டு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

வழக்கமாக லட்சக்கணக்கான கணவாய்கள் கூடும் இந்தப் பகுதியில், இந்த ஆண்டு வெறும் 1,811 கணவாய்கள் மட்டுமே வந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் (63,000) 97% குறைவு ஆகும்.

பொதுவாக மில்லியன் கணக்கில் இடப்படும் முட்டைகள், இந்த முறை வெறும் 440 மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. வளர்ந்த கணவாய்கள் இனப்பெருக்கத்திற்குப் பிறகு இறந்துவிடும் என்பதால், அடுத்த ஆண்டுக்கான இனம் தொடர்வது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த 18 மாதங்களாகக் கடற்கரைப் பகுதியைப் பாதித்து வரும் நச்சுப்பாசிப் பெருக்கமே (Toxic Algal Bloom) இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றது. கடல் வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த நிலை கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பெரிதும் பாதித்துள்ளது.

Bootstrap