வடக்கு சைப்ரஸ் கடற்கரை பகுதியில் பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு

வடக்கு சைப்ரஸ் (Northern Cyprus) கடற்கரை பகுதியில் பயணிகள் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக வடக்கு சைப்ரஸ் பிரதமர் Ünal Üstel உறுதிப்படுத்தியுள்ளதாக BBC News செய்தி வெளியிட்டுள்ளது.

 கியிரீனியா (Kyrenia) துறைமுகத்திலிருந்து 4 கடல் மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்த 'Filo Jet' என்ற பயணிகள் கப்பல், நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தக் கப்பலில் மொத்தம் 267 பயணிகள் மற்றும் ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர். இதில் 237 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 23 பேரைத் தேடும் தீவிர மீட்புப் பணியில் கடலோரப் பாதுகாப்புப் படையினரும் ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து குறித்து துருக்கிய உள்துறை அமைச்சகம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து வளங்களும் அணிதிரட்டப்பட்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Bootstrap