கனடா பிரதமர் மார்க் கார்னி ஆதரவுடன் உருவாக்கப்பட்டு வரும் புதிய உலகளாவிய பாதுகாப்பு வங்கி

நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பாதுகாப்புத் திட்டங்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கவும் தோராயமாக €100 பில்லியன் ($116 பில்லியன்) நிதி திரட்ட இந்த வங்கி திட்டமிட்டுள்ளது. கனடாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்த வங்கிக்கு இதுவரை சுமார் €5 பில்லியன் நிதி உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கனடாவுடன் இணைந்து அல்பேனியா, பெல்ஜியம், கிரீஸ், லாத்வியா,லக்சம்பர்க், ருமேனியா, துருக்கி மற்றும் உக்ரைன் ஆகிய ஒன்பது நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், பிரிட்டன், ஜெர்மனி போன்ற பெரிய பொருளாதார நாடுகள் இன்னும் இதில் இணையவில்லை.

 ஐரோப்பிய யூனியனின் SAFE திட்டம் மற்றும் பிரிட்டனின் முத்தரப்பு பாதுகாப்பு பொறிமுறை (MDM) போன்ற ஏற்கனவே உள்ள பிற நிதி முயற்சிகளுடன் இது ஒன்றுடன் ஒன்று மோதுமா என்ற தயக்கம் பல நாடுகளிடம் உள்ளது. மேலும், மலிவான வட்சியில் நிதி கிடைப்பதில் உள்ள சந்தேகங்கள் மற்றும் அரசு நிதியுதவி மீதான சுமை காரணமாக சில நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.

 இந்த ஆண்டின் இலையுதிர்காலத்தில் (Autumn) உறுப்பு நாடுகளின் சாசனம் கையெழுத்தாகவுள்ளது. வங்கியானது மிகச்சிறந்த 'AAA' கடன் தரத்தைப் பெற்று சர்வதேச அளவில் பாதுகாப்புத் துறையில் முக்கியப் பங்காற்றும் என அமைப்பாளர்கள் நம்புகின்றனர்.

Bootstrap