தீவிரமடையும் டெங்கு நோய்!

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 95,174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,838 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை மேல் மாகாணத்தில் 50,358 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

தெற்கு மாகாணத்தில் 13,854 நோய்த்தொற்றுகளும், அதனைத் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் 8,659 நோய்த்தொற்றுகளும், சபரகமுவ மாகாணத்தில் 7,825 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை இந்த ஆண்டு இதுவரை  72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Bootstrap