பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது- நள்ளிரவு முதல் அமுல்!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (30) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய விலைத் திருத்தங்களின்படி, 92 ஒக்டென் பெட்ரோல் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ. 399.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முன்னைய விலை ரூ. 414.00).

95 ஒக்டென் பெட்ரோல் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ. 475.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முன்னைய விலை ரூ. 495.00).

இதனிடையே, மற்றைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

அதன்படி, ஒட்டோ டீசல் ரூ. 382.00, சுப்பர் டீசல் ரூ. 478.00 மற்றும் மண்ணெண்ணெய் ரூ. 285.00 ஆகிய விலைகளில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Bootstrap