உஸ்பெகிஸ்தானுக்கு அரசு முறைப்பயணம் - வைரலாகும் இந்திய பிரதமரின் காணொளி

உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு, நான்கு நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள காணொளி ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

தாஷ்கண்டில் இன்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டுள்ளார்.

இதன்போது,யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் மோடி காணொளி பதிவு செய்து அதனை தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த காணொளியில், ''நமஸ்தே, நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று சிறப்பாக யோகா செய்து காட்டி இருக்கிறீர்கள். அனைத்து வயதினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றீர்கள். என் நண்பரான உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதிக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.'' என கூறியுள்ளார்.

இதன்பின்னர் அவர் யோகா செய்து கொண்டிருந்தவர்களிடம் உரையாடியுள்ளார். இந்தியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவுடன் இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் விமான நிலையத்துக்கு நேற்று சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் நேரில் சென்று வரவேற்றுள்ளார். இந்திய வம்சாவளியினர் கலைநிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Bootstrap