கனடாவில் இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் பரிதாப பலி!

கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் உள்ள ஆபர்ன் பகுதியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சனிக்கிழமை காலை 11 மணியளவில் நெடுஞ்சாலை 101 இல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிழக்கில் சென்ற செவ்ரோலெட் இம்பாலா காரும், மேற்கில் வந்த ஃபோர்டு எஸ்கேப் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

ஃபோர்டு எஸ்கேப் காரை ஓட்டி வந்த புரோஸ்பெக்ட் பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செவ்ரோலெட் இம்பாலா காரை ஓட்டி வந்த கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த 34 வயது ஆண் உயிரிழந்தார்.

இரு கார்களிலும் ஓட்டுநர்கள் மட்டுமே பயணித்துள்ளனர்; வேறு பயணிகள் யாரும் இருக்கவில்லை.

விபத்து குறித்த விசாரணைகளுக்காக நெடுஞ்சாலை 101 பல மணி நேரம் மூடப்பட்டது.

பொலிஸார் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது விபத்து தொடர்பான டேஷ்கேம் வீடியோ காட்சிகளை வைத்துள்ள பொதுமக்கள், கிங்ஸ் டிஸ்ட்ரிக்ட் RCMP-ஐ 902-679-5555 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Bootstrap