அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்சமயம் "மிகவும் நல்ல நிலையில்" உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கக் கடற்படையின் உதவியுடன் தினமும் சராசரியாக 30 கப்பல்கள் அந்தப் பகுதி வழியாகப் பாதுகாப்பாகப் பயணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், ஈரானின் பொருளாதாரம், இராணுவம் மற்றும் அதன் தலைமைத்துவம் ஆகியவை பெருமளவில் சீர்குலைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், அதன் காரணமாக ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கைகளை அமெரிக்கா தவிர்க்கப்போவதில்லை என்றும், அங்கு நிகழும் சூழல்களுக்கு ஏற்பத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்தநிலையில், ஹோர்முஸ் நீரிணையின் லாராக் தீவில் இருந்த ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.