நியூயொர்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில், அமெரிக்காவின் சோபியா கெனின் 6-2, 7-6 (6) என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவரான வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
முன்னதாக, நோவக் ஜோகோவிச் - மரியானோ நவோன் இடையேயான போட்டி நீண்ட நேரம் நீடித்த காரணத்தால் இந்தப்போட்டி நேற்று நள்ளிரவைத் தாண்டியே ஆரம்பமானது.
மகளிர் டென்னிஸ் வரலாற்றில் இவ்வளவு தாமதமாக ஆரம்பமான முதல் போட்டி இதுவாகும்.
இதன்போது 46 வயதான வீனஸ் வில்லியம்ஸ் தனது 96 வது கிராண்ட்ஸ்லாம் பிரதான அரங்குப் போட்டியில் வைல்டு கார்ட் மூலம் களமிறங்கினார்.
போட்டியின் ஆரம்பம் முதல் இருவரும் சற்றுத் திணறினாலும் , கெனின் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி முதல் செட்டைக் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் வீனஸ் வில்லியம்ஸ் கடும் சவாலை அளித்து டைபிரேக் வரை கொண்டு சென்றாலும் , கெனின் சுதாரித்து விளையாடி வெற்றியைத் தன்வசப்படுத்தினார்.