ஜூன் மாத இடைக்கால ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றினால் அதற்கு தாங்களும் உடன்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக அமெரிக்கப் படைகள் ஈரானின் லாராக் தீவு மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் ஜோர்டானில் உள்ள அமெரிக்க வான்வெளி தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஜூன் மாத ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்றினால், இஸ்லாமிய குடியரசான ஈரானும் அதற்கு உடனடியாக ஒத்துழைக்கும் என அதிபர் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) தெரிவித்தார்.

உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் முக்கியமான பகுதியான ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) சவுதி அரேபியாவின் இரண்டு சூப்பர் டேங்கர் கப்பல்கள் மீது மர்மப் பொருட்கள் தாக்கியதால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

 அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில், ஈரானிய மத்திய வங்கியின் ஆளுநர் அப்துல்நாசர் ஹெம்மாட்டி (Abdolnaser Hemmati) தங்கள் நாட்டில் போதுமான வெளிநாட்டு நாணயக் கையிருப்பு உள்ளதாகவும், சந்தையின் நிலைத்தன்மைக்காக 2 பில்லியன் டாலர் வரை சந்தையில் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Bootstrap