ஐரோப்பாவின் மிகப்பெரிய தரைப்படையை உருவாக்கும் முயற்சியில் போலந்து நாடு இறங்கியுள்ளது

ஐரோப்பாவின் மிகப்பெரிய தரைப்படையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள போலந்து நாடு, வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்துவிட்டு உள்நாட்டு மற்றும் பிராந்திய பாதுகாப்பு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

உக்ரைன் போர் மற்றும் பாதுகாப்பு தேவைகள் காரணமாக, போலந்து நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புப் பொருள் கொள்முதல் 2022-க்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு மடங்காக அதிகரித்து கடந்த ஆண்டு 30.4 பில்லியன் ஸ்லாட்டுகளாக ($8.15 பில்லியன்) உயர்ந்துள்ளது.

நடப்பாண்டில் போலந்து தனது பாதுகாப்புச் செலவினங்களுக்காக சுமார் €53 பில்லியன் ($61.45 பில்லியன்) அதாவது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 4.7% செலவிட உள்ளது. இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக நான்காவது அதிகபட்ச தொகையாகும்.

 அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் எப்-35 போர் விமானங்கள் தொடர்ந்து முக்கியமாக இருந்தாலும், ட்ரோன்கள், வெடிமருந்துகள் மற்றும் அவசரமாகத் தேவைப்படும் ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதே தங்களின் பிரதான இலக்கு என பாதுகாப்புத்துறை அமைச்சர் விளாடிஸ்லாவ் கொசினியாக்-கமிஷ் தெரிவித்துள்ளார்.

செக் குடியரசைச் சேர்ந்த CSG நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் ரைன்மெட்டால் போன்ற ஐரோப்பிய நிறுவனங்களுடன் போலந்து கூட்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் எல்லைப் பகுதிக்குத் தேவையான ஆயுத விநியோகங்களை தடையின்றி பெறவும், உலகளாவிய விநியோகத் தடைகளை எதிர்கொள்ளவும் முடியும் என அந்நாடு கருதுகிறது.

Bootstrap