வானூர்தி நிலையம் மீதான தாக்குதல் முயற்சிக்கு ரஷ்யாவே காரணம் - குற்றம் சுமத்தும் ஜேர்மன்

ஜெர்மனியின் லீப்ஜிக்ஃஹாலே வானூர்தி நிலையத்தின் மீது கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதல் முயற்சிக்குப் பின்னால் ரஷ்யா இருப்பதாக ஜெர்மன் அரசு குற்றம் சாட்டியுள்ளது:

கடந்த ஆகஸ்ட் 4 அன்று வெடிகுண்டுகளுடன் கூடிய ஆளில்லா வானூர்தி ஒன்று லீப்ஜிக்ஃஹாலே வானூர்தி நிலையத்தில் யுக்ரைன் சரக்கு வானூர்திக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டு பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டது.

இதுவொரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும்இ ரஷ்ய அரசு அமைப்புகளின் சார்பாகச் செயல்படும் முகவர்கள்தான் இதற்குப் பொறுப்பு என்பதற்கு தங்களிடம் ஆதாரங்கள் உள்ளதாகஇ ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டொப்ரிண்ட் (Alexander Dobrindt) தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து, ரஷ்ய தூதர் வரவழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், பன்னில் உள்ள ரஷ்ய தூதரகமும் பெர்லினில் உள்ள 'ரஷ்யன் ஹவுஸ்' கலாசார மையமும் மூடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜோஹன் வாடேபுல் அறிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யாவின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் மரியா சகாரோவா பெர்லினின் இந்த "ரஷ்ய எதிர்ப்பு நடவடிக்கைக்கு" மொஸ்கோ தகுந்த பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.

Bootstrap