பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா, உடல்நலக்குறைவு காரணமாக தனது 64ஆவது வயதில் காலமானார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (01) இரவு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மறைந்த பிரியங்கர பெரேரா, பிரபல பாடகர் மில்டன் பெரேராவின் மகனாவார்.
‘சுபுன் சந்தக்’, ‘சந்துன் கசே சமன் வலக்’, ‘சிக்குருலியா’, ‘அகாத சகராரே’ உள்ளிட்ட பிரபல பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்.
பாடகராக மட்டுமன்றி நடிகராகவும் கலைத்துறையில் தனது பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.