2029ஆம் ஆண்டு விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப் போவது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திதான் என தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், 2029ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் வேட்பாளர் விஜய்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என தம்மிடம் கேட்கப்பட்டபோதும், விஜய்தான் முதல்வராவார் எனத் தெரிவித்ததாகக் கூறிய கனிமொழி, பின்னர் விஜய் முதல்வரானதை நாடே பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 2029ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமரை டெல்லியில் இருந்து தீர்மானிக்க முடியாது என்றும், தமிழகத்தில் இருந்தே அந்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை 2029ஆம் ஆண்டு காண முடியும் எனத் தெரிவித்த அவர், அப்போது காங்கிரஸ் கட்சி தங்களுடன் இணைந்து பயணிக்குமா அல்லது தனித்து செல்லுமா என்பது தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தது ராகுல் காந்திதான் எனக் குறிப்பிட்ட கனிமொழி, எதிர்காலத்தில் அவரே விஜய்யின் கையைப் பிடித்து பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விஜய்யின் தேசிய அரசியல் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடர்ச்சியாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்தநிலையில், விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ள கனிமொழியின் கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.