இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் கலிமந்தான் பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ள நிலையில், பல பகுதிகளில் நச்சுப் புகை பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ காரணமாக உருவாகியுள்ள அபாயகரமான புகைமூட்டத்தால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தோனேசியாவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் ஆயிரக்கணக்கானோர் சுவாச நோய்த்தொற்றுகளுக்காக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீயிலிருந்து வெளியேறும் புகை மற்றும் புகைமூட்டம் மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளின் சில பகுதிகளிலும் பதிவாகியுள்ளது.
சில பகுதிகளில் காட்டுத்தீ வாரக்கணக்கில் தொடர்ந்து எரிந்து வருவதுடன், அடர்த்தியான புகைமூட்டம் காரணமாக தீயை அணைக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறைந்த பார்வைத்திறன் மற்றும் அடர்த்தியான புகை காரணமாக மேக விதைப்பு மற்றும் தீயணைப்பு விமானங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் சவாலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.