ஒட்டாவாவில் உள்ள நெடுஞ்சாலை 417-ன் (Highway 417) கிழக்கு திசைப் பாதையில், பார்க்லே அவென்யூ (Parkdale Avenue) அருகே புதன்கிழமை இரவு 8:15 மணியளவில் நடந்த விபத்தில் பாதசாரி ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்தார்.
ஓன்டாரியோ மாகாணக் காவல்துறை (OPP) மற்றும் துணை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவரை ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் அவர் உயிரிழந்ததாகக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
இந்த விபத்தில் உள்ளூர் போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான (OC Transpo) சேவையில் இல்லாத ஒரு பேருந்து (out-of-service bus) சம்பந்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து காரணமாக மூடப்பட்டிருந்த நெடுஞ்சாலைப் பாதைகள் வியாழக்கிழமை அதிகாலை 12:40 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டன. ஒன்டாரியோவில் உள்ள 400-வது தொடர் நெடுஞ்சாலைகளில் பாதசாரிகள் நடமாடுவது சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.