இன்றைய ராசிபலன் - செப்டம்பர் 4, 2026 வெள்ளி

பஞ்சாங்கம்

நாள் வெள்ளிக்கிழமை
திதி அஷ்டமி இரவு 11.46 வரை பிறகு நவமி
நட்சத்திரம் ரோகிணி இரவு 11.22 வரை பிறகு மிருகசீரிடம்
யோகம் மரணயோகம் இரவு 11.22 வரை பிறகு சித்தயோகம்
ராகுகாலம் காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் பகல் 3 முதல் 4.30 வரை
நல்லநேரம் காலை 9.15 முதல் 10.15 வரை / மாலை 2 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் சுவாதி இரவு 11.22 வரை பிறகு விசாகம்
சூலம் மேற்கு
பரிகாரம் வெல்லம்

இன்று (04) ரிஷப ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மேலும் மரண யோகம் உள்ளது. கடகத்தில் குரு உச்சம் பெற்றும், கடக அதிபதி சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்று ரோகிணி நடத்திரத்தில் சஞ்சரிப்பதும், அஷ்டமி திதி நடப்பதால் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படக்கூடிய நாள். துலாமில் சுக்கிரன் ஆட்சி பெற்று, சிம்மத்தில். மூன்று கிரக சேர்க்கை நடக்கின்றன. இன்று துலாம் ராசியை சேர்ந்த சுவாதி, விசாகம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நாள்.

மேஷம் ராசி பலன் 

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று மனதிற்கு விருப்பமில்லாத சில கடினமான பணிகளை மற்றவர்களுக்காக இன்று முன்னின்று செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம். குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகளின் அணுகுமுறை சற்று மனவருத்தத்தைத் தந்தாலும், நிதானத்துடன் பேசுவது தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்கு அல்லது சட்ட விவகாரங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். இடமாற்றம், தொழில் சார்ந்த பயணங்களுக்கான முயற்சிகள் இன்று கைகூடும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் சிறு தொந்தரவுகள் ஏற்பட்டாலும் அலட்சியம் காட்டாமல் உடனுக்குடன் கவனிப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியும் பரஸ்பர மகிழ்ச்சியும் நிலவும். மதியத்திற்கு மேல் எதிர்பாராத சுபச் செய்திகள் வந்து சேரும். மாலையில் நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். இரவில் நடைபெறும் விசேஷங்களில் பங்கேற்பதன் மூலம் செல்வாக்குமிக்க புதிய நபர்களின் அறிமுகமும், சமூகத்தில் நற்பெயரும் கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சமூகத்தில் உங்கள் மீதான நல்லெண்ணமும் மதிப்பும் இன்று பல வழிகளில் கைக்கொடுக்கும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பும் ஒத்துழைப்பும் உங்களுக்குப் புது உற்சாகத்தைத் தரும். மதியத்திற்குப் பின் பணப்புழக்கம் சீராகி பொருளாதாரச் சுமை சற்றே குறையும். என்றாலும், பணிகளில் ஏற்படும் மெதுவான நகர்வு சஞ்சலத்தை ஏற்படுத்தலாம். உங்கள் பேச்சில் கூடுதல் நிதானமும் தெளிவும் தேவை; வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட வாய்ப்புள்ளது.

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாளின் தொடக்கத்திலேயே எதிர்பாராத சில தடைகளையும், மனக் குழப்பங்களையும் சந்திக்க நேரிடலாம். உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம்; சோர்வு அல்லது சிறு உபாதைகள் தலைதூக்கக்கூடும். வேலைப்பளுவை விட ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்த்து, திட்டமிட்டு நிதானமாகச் செயல்பட்டால் நாளின் சவால்களை எளிதாகக் கடந்துவிடலாம்.

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த சுபிட்சமான சூழல் இன்றும் தொடரும். பணியிடத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரமும் முன்னேற்றமும் கூடும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைப்பதால் புதிய திட்டங்களை தைரியமாக முன்னெடுக்கலாம். உங்களின் நேர்த்தியான உழைப்பு அதிகாரிகளால் பாராட்டப்பட்டு, நிர்வாகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று இன்று உற்சாகமும் புத்துணர்ச்சியும் நிறைந்த மனநிலையில் இருப்பீர்கள். நண்பர்களுக்கும் உடன் இருப்பவர்களுக்கும் உதவ முன்வருவீர்கள்; எனினும், உதவி கோருபவர்களின் உண்மைத் தன்மையை உணர்ந்து செயல்படுவது ஏமாற்றங்களைத் தவிர்க்கும். உற்ற தோழர்களுடன் முக்கியமான விஷயங்களைப் பகிர்வதும், அவர்களின் ஆலோசனைகளைக் கேட்பதும் உங்கள் திட்டங்களுக்குப் புதிய தெளிவைத் தரும்.

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று போட்டித் தேர்வுகள் அல்லது நேர்முகத் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு. தொழில் விரிவாக்கம், புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுதல் மற்றும் முக்கிய ஆவணங்களை இறுதி செய்ய இன்றைய நாள் மிகவும் உகந்தது. நண்பகல் வரையிலான கிரக நிலைகள் உங்கள் பணிகளுக்குப் பக்கபலமாக இருக்கும். அவசர முடிவுகளைத் தவிர்த்து, சீர்தூக்கி ஆராய்ந்து முடிவெடுத்தால் வெற்றி நிச்சயம்.

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சில விவகாரங்கள் நீங்கள் திட்டமிட்டபடி அமையாமல் போகலாம். அதிக நம்பிக்கை வைத்த நபர்களிடமிருந்து ஏமாற்றங்களோ அல்லது முரண்பட்ட அணுகுமுறையோ வெளிப்பட வாய்ப்புள்ளதால், அந்தரங்க விஷயங்களை யாருடனும் பகிர்வதைத் தவிர்க்கவும். எதிலும் கலவையான பலன்களே கிடைக்கும். எனினும், இழுபறியாக இருந்த முக்கிய வேலையை முடித்துவிடுவது நிம்மதி தரும். மாலையில் வரும் ஒரு நல்ல தகவல் மனச்சோர்வை நீக்கும்.

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று முன்னர் தடைபட்ட ஒரு பணி குறித்து ஆரம்பத்தில் சிறு கவலை தோன்றினாலும், படிப்படியாக நிலைமை உங்களுக்குச் சாதகமாக மாறும். உங்கள் தொடர் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டும். வீண் பயங்களையும் எதிர்மறைச் சிந்தனைகளையும் தவிர்ப்பது மன அமைதியைக் காக்கும். மதியத்திற்கு மேல் மேற்கொள்ளும் சிறு பயணங்கள் அனுகூலமான பலன்களையும் ஆதாயத்தையும் பெற்றுத் தரும்.

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளவும், அறிவை விரிவுபடுத்தவும் சிறப்பான நாளாக அமையும். முக்கிய பிரமுகர்களுடனான சந்திப்பு எதிர்காலத் திட்டங்களுக்குப் பெரும் பலம் சேர்க்கும். முன்னெடுக்கும் காரியங்களில் நல்ல லாபமும், குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் உண்டு. உறவினர்கள் வழியே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். சுபகாரிய ஆலோசனைகளில் உங்கள் கருத்துகளுக்கு குடும்பத்தினர் முன்னுரிமை கொடுப்பார்கள்.

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பணி நிமித்தமான பயணங்களும், பல வேலைகளை ஒரே நேரத்தில் முடிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படலாம். நேர மேலாண்மையைக் கடைப்பிடித்தால் பணிச்சுமையை சுலபமாகத் தணிக்க முடியும். நண்பர்களின் சில எதிர்பாராத செயல்பாடுகள் மனவருத்தத்தை உண்டாக்கலாம். தனிப்பட்ட அல்லது காதல் விவகாரங்களில் நீடிக்கும் குழப்பங்களுக்கு தயக்கமின்றி தெளிவான முடிவை எடுப்பது எதிர்காலத்திற்கு நல்லது.

மீனம் ராசி பலன் 

மீன ராசி அன்பர்களுக்கு இன்று முற்பகலில் நீண்ட நாட்களாக முடிக்காமல் வைத்திருந்த முக்கியப் பணிகளுக்கு முன்னுரிமை தந்து விரைந்து முடியுங்கள். பிற்பகலில் காரியங்களில் சிறுசிறு சுணக்கங்கள் அல்லது தடைகள் வரக்கூடும். பொறுமையிழக்காமல், நிதானத்துடன் சூழலைக் கையாள்வது நல்லது. சங்கடமான நேரங்களில் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆலோசனையைப் பெறுவது உங்கள் தன்னம்பிக்கையைத் தக்கவைக்கும்.

Bootstrap