இந்திய நிறுவனத்துடன் ஊழல் குற்றச்சாட்டு.. பதவியை ராஜினாமா செய்த எஸ்டோனியா அமைச்சர்!

உக்ரைன் போருக்கு உதவுவதற்காக 155mm பீரங்கி குண்டுகளைக் கொள்முதல் செய்ய ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் எஸ்டோனியா பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்தது. இதற்காக, இத்தாலியில் பதிவுசெய்யப்பட்ட முன்னனுபவமே இல்லாத இந்திய நிறுவனத் தொடர்புடைய 'டாட்டாசெல்' (Datasel SRL) என்ற நிறுவனத்திற்கு முன்பணம் வழங்கப்பட்டது. ஆனால், ஆயுதங்கள் உரிய நேரத்தில் விநியோகிக்கப்படாமலும், பெறப்பட்ட சில ஆயுதங்கள் தரமற்றவையாகவும் இருந்தது தணிக்கையில் தெரியவந்தது. இந்த தவறான கொள்முதல் நடவடிக்கை மற்றும் குளறுபடிகளுக்குத் தலைமைப் பொறுப்பேற்று, தாம் பதவியிலிருந்து விலகுவதாக எஸ்டோனியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் அறிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக எஸ்டோனியாவின் தணிக்கைத் துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், வழங்கப்பட்ட நிதியை மீட்க எஸ்டோனியா அரசு சர்வதேச வணிக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எல்டோனியா பிரதமர் கிறிஸ்டன் மைக்கல், “அவர் மீது (பெவ்குர்) தனிப்பட்ட எந்த தவறையும் காண முடியவில்லை. ஆனால் அரசியல் பொறுப்பு ஏற்படக்கூடும் என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Bootstrap