கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் மூன்று சீனப் பிரஜைகள் கடத்தப்பட்டு, அவர்களில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 23, 2026 அன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (செப்டம்பர் 04) கொழும்பு துறைமுக நகரத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது 54 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.