நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக அதிகரிப்பு

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

திபெத் – நேபாள எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவைத் தொடர்ந்து லெண்டே ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி ஆற்றில் பெருக்கெடுத்தது.

இதனால் கரையோர கிராமங்கள் மற்றும் சிறு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதுவரை 1,344 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4,800க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. பிதூர் பகுதியில் குடிநீருக்குப் பயன்படுத்தப்படும் 15 நீர்நிலைகள் பாக்டீரியாக்களால் மாசடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சுமார் ஒரு இலட்சம் பேருக்கு காலரா தடுப்பூசியும், 75,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசியும் வழங்குவது தொடர்பில் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

Bootstrap