அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் மோதலை “போர் அல்ல” என துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தெரிவித்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான மோதல் தங்களுக்கு “சிறு விடயம்” என தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் தற்போது இடைவிட்டு இடம்பெறுவதாகவும், இதனை பலர் போர் என அழைப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த மோதலில் இதுவரை 18 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதுடன், அமெரிக்க வரி செலுத்துவோருக்கு 37.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலை “போர்” என அழைக்க மறுத்த வேன்ஸ், நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னர் இந்த மோதல் முடிவடையும் என உறுதியான கணிப்பை வெளியிடவும் மறுத்துள்ளார்.
இதனிடையே, ஈரானின் அணுசக்தித் திட்டத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் பெருமளவில் பாதித்துள்ளதாக மீண்டும் தெரிவித்த ட்ரம்ப், ஈரானிடம் அணு ஆயுதம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.