நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் வீடு இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 60 வயது மூதாட்டி ஒருவர் 11 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
தீவிர மீட்புப்பணி நடைபெற்று வருகையில், நுவாகோட் மாவட்டத்தில் உள்ள பெட்ராபதியில், நான்கு மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த வீட்டின் மேல் தளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
ஆயுதப் படை குழுவினரால் மீட்கப்பட்ட குறித்த மூதாட்டி, முதலுதவி சிகிச்சைக்காக ஹெலிக்கொப்டர் மூலம் திரிசூலியில் உள்ள நேபாள இராணுவத்தின் மைதிலி முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.