ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தில் எரிபொருள் டேங்கர் லொறி விபத்துக்குள்ளாகி வெடித்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சனந்தாஜ் – ஹமேதான் நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
டேங்கர் லொறியின் பிரேக்கிங் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ அருகிலிருந்த வாகனங்களுக்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.