நேபாளத்தில் 10 நாட்களுக்குப் பின்னர் மேலும் 2 பேர் உயிருடன் மீட்பு

நே​பாளத்​தில் பெரு​வெள்​ளம் ஏற்​பட்டு பெரும் பாதிப்பை ஏற்​படுத்​திய நிலை​யில் 10 நாட்​களுக்​குப் பின்​னர் 2 பேர் நேற்று உயிருடன் மீட்​கப்​பட்​டுள்​ளனர்.

நேபாளத்​தில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்​பட்ட பெரு​வெள்​ளத்​தில் சிக்​கிய​வர்​களை மீட்​கும் பணி​யில் பேரிடர் மீட்​புப் படை​யினரும், ராணுவத்​தினரும் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில் பெரு​வெள்​ளம் ஏற்​பட்டு 9 நாட்​களுக்​குப் பின்​னர் நேற்று முன்​தினம் 2 தொழிலா​ளர்​கள் உயிருடன் மீட்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில் மேலும் 2 பேரை நேற்று நேபாள ராணுவத்​தினர் உயிருடன் மீட்​டனர்.

இதுகுறித்து நேபாள ராணுவ அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “நே​பாள ராணுவத்​தினரும், தென் கொரி​யா​விலிருந்து வந்​துள்ள பேரிடர் சிறப்பு மீட்​புப் படையைச் சேர்ந்​தவர்​களும் தொடர்ந்து மீட்​புப் பணி​யில் ஈடு​பட்டு 2 பேரை உயிருடன் மீட்​டுள்​ளனர். 225 மீட்​டர் நீள​முள்ள சுரங்​கத்​தில் சிக்​கி​யிருந்த சீனாவைச் சேர்ந்த ஒரு தொழிலா​ளர் மீட்​கப்​பட்​டார்.

அதே​போல் நுவாகோட் நகரில் இடிந்து விழுந்த வீட்​டிலிருந்த 64 வயதான பெண் மீட்​கப்​பட்​டுள்​ளார். அவரது பெயர் சந்​திகா ஸ்ரேஸ்தா என்று தெரிய​வந்​துள்​ளது. மீட்​கப்​பட்ட இரு​வரும் ஹெலி​காப்​டர் மூலம் காத்​மாண்​டுக்கு உயர் சிகிச்​சைக்​காக அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளனர்​” என்​றார்​.

இதுவரை 13,000 பேர் மீட்பு: 1,344 பேர் உயிரிழப்பு

நே​பாள பெரு​வெள்​ளத்​தில் இருந்து இது​வரை 13,000 பேர் மீட்​கப்​பட்​டுள்​ளனர். உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 1,344 ஆக உயர்ந்​தது.

திபெத்​-நே​பாள எல்​லை​யில் கடந்த மாதம் 26-ம் தேதி பனிப்​பாறை உடைந்​ததன் விளை​வாக நேபாளத்​தின் போடே கோசி, திரிசூலி ஆகிய ஆறுகளில் வெள்​ளம் பெருக்​கெடுத்​தது. வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்டு நூற்​றுக்​கணக்​கான மக்​கள் உயி​ரிழந்​தனர்.

இந்​நிலை​யில் வெள்​ளம் பாதித்த பகு​தி​களில் நேற்று 11-வது நாளாக மீட்பு பணி​கள் தொடர்ந்​தன. இதில் மேலும் பல உடல்​கள் மீட்​கப்​பட்​டன. இதன் மூலம் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 1,344 ஆக உயர்ந்​தது. காணா​மல்​போன 4,898 பேரை தேடும் பணி​யில் மீட்பு குழு​வினர் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர். வெள்​ளம் பாதித்த பகு​தி​களில் இருந்து இது​வரை 13,000 பேர் மீட்​கப்​பட்​டுள்​ள​தாக அந்​நாட்​டின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்​றும் மேலாண்மை ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.

Bootstrap