அமெரிக்காவைவிட ஆப்பிரிக்கா பெரிதாக இருக்கும் புதிய உலக வரைபடத்துக்கு ஐ.நா. சபை ஒப்புதல்

பு​திய உலக வரைபடம் தொடர்​பான தீர்​மானம் ஐ.நா. சபை​யில் நேற்று பெரும்​பான்மை ஆதர​வுடன் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி ஆப்​பிரிக்க கண்​டம் பெரி​தாக​வும் வடஅமெரிக்​கா, ஐரோப்​பிய கண்​டம் சிறிய​தாக​வும் மாற்​றப்​பட்டு உள்​ளன.

கடந்த 1569-ம் ஆண்​டில் நெதர்​லாந்​தைச் சேர்ந்த புவி​யியல் ஆராய்ச்​சி​யாளர் கெரார்​டஸ் மெர்​கேட்​டர் உலக வரைபடத்தை உரு​வாக்​கி​னார். இதில் பூமத்​திய ரேகைக்கு அரு​கில் உள்ள பகு​தி​கள் சிறிய​தாக​வும் துரு​வப் பகு​தி​கள் பெரிய​தாக​வும் காட்​டப்​பட்​டன. உதா​ரண​மாக மெர்​கேட்​டரின் உலக வரைபடத்​தில் கிரீன்​லாந்து தீவும் ஆப்​பிரிக்க கண்​ட​மும் ஒரே அளவாக காட்​சி​யளித்​தன. ஆனால் கிரீன்​லாந்​தை​விட ஆப்​பிரிக்க கண்​டம் 14 மடங்கு பெரியது ஆகும்.

இதைத் தொடர்ந்து ஆப்​பிரிக்​கா​வின் உண்​மை​யான நிலப்​பரப்பை பிர​திபலிக்​கும் புதிய உலக வரைபடத்தை ஐ.நா. சபை​யில் ஆப்​பிரிக்க நாடு​கள் சமர்ப்​பித்​தன. இதுதொடர்​பான தீர்​மான​மும் கொண்டு வரப்​பட்​டது. இந்​தத் தீர்​மானம் மீது ஐ.நா. சபை​யில் நேற்று வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

இந்​தியா உட்பட 164 நாடு​கள் தீர்​மானத்​துக்கு ஆதர​வாக வாக்​களித்​தன. உக்​ரைன், எஸ்​டோனி​யா, ஜார்​ஜி​யா, லிது​வேனி​யா, மால்​டோ​வா, செர்​பியா ஆகிய 6 நாடு​கள் வாக்​கெடுப்​பில் பங்​கேற்​க​வில்​லை. அமெரிக்கா மட்​டும் தீர்​மானத்​துக்கு எதி​ராக வாக்​களித்​தது.

இதுதொடர்​பாக அமெரிக்க தூதர் யரினா பெரென்​செ​விச் கூறும்​போது, உலகம் எதிர்​கொள்​ளும் உண்​மை​யான பிரச்​சினை​கள் குறித்து ஐ.நா. சபை கவனம் செலுத்த வேண்​டும். 16-ம் நூற்​றாண்டு உலக வரைபடத்தை மாற்​று​வ​தில் எந்​தப் பயனும் இல்​லை” என்​றார்.

புதிய உலக வரைபடத்​தின்​படி ஆப்​பிரிக்க கண்​டம் பெரி​தாக​வும் வடஅமெரிக்​கா, ஐரோப்​பிய கண்​டம் சிறிய​தாக​வும் மாற்​றப்​பட்டு உள்​ளன. இந்​தி​யாவை பொறுத்​தவரை மிகப்​பெரிய மாற்​றம் ஏது​வும் இல்​லை. ஆப்​பிரிக்க நாடு​கள் உடனான உறவை புதுப்​பிக்க பிரிட்​டன், பிரான்​ஸ், ஜெர்​மனி உள்​ளிட்ட நாடு​கள் விரும்​பு​கின்​றன. இதன் காரண​மாக பெரும்​பாலான ஐரோப்​பிய நாடு​கள் புதிய உலக வரைபடத்​துக்​கு ஆதர​வாக வாக்​களித்​துள்​ளன.

Bootstrap