கனடாவைச் சேர்ந்த ஓவியரும் காட்சி கலைஞருமான மைக்கேல் ஹாரிங்டன் அமெரிக்காவில் நடத்தவிருந்த தனது கலைக் கண்காட்சியை ரத்து செய்துள்ளார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஒரு கலைக் கூடத்தில் நவம்பர் மாதம் இவரின் கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்படும் கலைப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய வரியைச் செலுத்தி தனது கலைப் படைப்புகளை அமெரிக்கச் சந்தையில் விற்பனை செய்வது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது என்பதால், அவர் கண்காட்சியை முழுமையாக ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த புதிய வர்த்தகக் கொள்கை மற்றும் வரி விதிப்பு முறையானது, தங்களை அமெரிக்கச் சந்தையிலிருந்து முழுமையாக விலக்கிக் கொள்ளச் செய்வதாகவும், இது எல்லை தாண்டிய கலைப் பரிமாற்றங்களையும் சுயாதீனக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிப்பதாகவும் கனடியக் கலைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.