காஸாவில் நிதிப் பற்றாக்குறை மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் உயர்வு காரணமாக சமூக சமையலறைகளின் இயக்கம் பெருமளவில் சரிவடைந்துள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடும்பங்கள் போதிய உணவின்றித் தவிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு உணவை 7 பேர் பங்கிட்டுக்கொள்ளும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று கூறுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஓச்சா அமைப்பின் தரவுகளின்படி கடந்த மார்ச் பாதியில் 165 சமையலறைகள் மூலம் தினமும் வழங்கப்பட்டு வந்த 15 லட்சம் உணவுகள் ஜூலை மாதத்தில் 102 சமையலறைகள் மூலம் 698000 ஆகக் குறைந்துள்ளன.
நிதி நெருக்கடி மற்றும் சமையல் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையே இந்த வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாகும்.
உலக உணவுத் திட்டத்தின் ஜூலை அறிக்கையின்படி காஸாவில் உள்ள 77% குடும்பங்கள் போதிய வருமானம் இல்லாததால் புதிய காய்கறிகள் பழங்கள் மற்றும் புரதச் சத்துள்ள உணவுகளை வாங்க முடியாமல் திணறி வருகின்றன.
தொடர்ந்து உப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளையே உட்கொள்வதால் சிறுவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நோய்கள் கண்டறியப்பட்டுள்ளதாக காஸா தவல்கள் கூறுகின்றன.