“பாதி உள்ளே, பாதி வெளியே முடியாது”: ஹரி மற்றும் மேகன் நிலை குறித்த மன்னர் சார்லஸின் கடிதம் !

பிரித்தானியாவுக்கு திரும்பியுள்ள இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கெல் ஆகியோர், அரச குடும்பத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்ளும் "செயலில் உள்ள அரச குடும்ப உறுப்பினர்கள் அல்ல என்று அரண்மனை தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மன்னர் சார்லஸ் சார்பில் லோர்ட் சேம்பர்லைன் அனுப்பியுள்ள இந்த கடிதம், ஹரி மற்றும் மேகனின் தற்போதைய நிலைமையை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, ஹரி மற்றும் மேகன் தொடர்ந்து "தனியார் குடிமக்களாகவே" கருதப்படுவார்கள் என்றும், "ஹிஸ் அண்ட் ஹர் ரோயல் ஹைனஸ்" (His and Her Royal Highness) என்ற பட்டங்களைப் பயன்படுத்த முடியாது என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு பொது நிகழ்வுகளும் அல்லது தொண்டுப் பணிகளும் அரச குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாது,அவை முழுக்க முழுக்க அவர்களின் தனிப்பட்ட திறனிலேயே மேற்கொள்ளப்படும்.

2020 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட 'சாண்ட்ரிங்கம் ஒப்பந்தத்தின்' (Sandringham Agreement) படியே இந்த நிலை தொடர்கிறது.

இந்தநிலையில், அரச குடும்பத்தில் 'பாதி உள்ளே, பாதி வெளியே' (half-in and half-out) என்ற நிலை இருக்க முடியாது என்பதில் அரண்மனை உறுதியாக உள்ளது.

முன்னதாக, அமெரிக்க கலிபோர்னியாவில் வசித்து வந்த ஹரி-மேகன் தம்பதியினர் கடந்த மாதம் தங்கள் பிள்ளைகளுடன், பிரிட்டனுக்குத் திரும்பினர்.

அடுத்த ஆண்டு பேர்மிங்காமில் நடைபெறவுள்ள 'இன்விக்டஸ் கேம்ஸ்' (Invictus Games) உள்ளிட்ட தொண்டு நிறுவனப் பணிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bootstrap