அமெரிக்காவில் தமது வானுார்திகளை விற்பனை செய்ய வேண்டுமானால் கனடாவைச் சேர்ந்த 'போம்பார்டியர்' (Bombardier) நிறுவனம் அமெரிக்காவிலேயே தனது வானுார்திகளை தயாரிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க சந்தை வேண்டுமெனில் அவர்கள் இங்குதான் உற்பத்தி செய்ய வேண்டும், அமெரிக்காவை ஒரு 'பிக்பேங்க்' (piggybank) என்ற சொந்த சொத்து போன்று நடத்துவதை நிறுத்த வேண்டும்" என்று சமூக வலைத்தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே வர்த்தக மோதல்கள் வெடித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கனடா பொருட்கள் மீது ட்ரம்ப் வரி விதித்துள்ளதால், அதற்குப் பதிலடியாக கனடாவும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமெரிக்கப் பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை நடைமுறைப்படுத்தவுள்ளது.
கனடா தனது நாட்டின் வங்கிகளையும், அமெரிக்க நிறுவனங்களையும் குறிப்பாக ( கல்ஃப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் - Gulfstream Aerospace) நிறுவனத்தை தமது சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கவில்லை என்று ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
எனினும் போம்பார்டியர் நிறுவனத்தின் 50 வீத வருமானம் அமெரிக்காவில்தான் கிடைக்கிறது.
இந்த நிலையில், ட்ரம்பின் அறிவிப்பு, நெட்ஜெட்ஸ்' (NetJets) போன்ற பெரிய தனியார் ஜெட் வானுார்தி நிறுவனங்களை நேரடியாகப் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.