வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியான ‘க்ரீன் கார்ட்’ பெற்றுக் கொடுப்பதற்கான PERM சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பதில், Cognizant நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா மோசடி தொடர்பான முறைப்பாடு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், அமெரிக்க ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் குறைந்த ஊதியப் பிரிவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசா விண்ணப்பங்களை Cognizant நிறுவனம் தாக்கல் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளின் முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.