ஜனாதிபதியைச் சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (9) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

நாட்டிற்கு நேற்று(8) வந்தடைந்த அவர், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் சிநேகபூர்வமான சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று மதியம் நடைபெறவுள்ளது.

பின்னர், கொழும்பு கங்காராம விஹாரையில் இன்று மதியம் நடைபெறும் போதி பூஜை வழிபாட்டு நிகழ்விலும் அவர் கலந்துகொள்ள உள்ளார்.

இன்றைய சந்திப்பின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Bootstrap