சுவிஸ் நகரமொன்றில் பாரிய தீவிபத்து: ஒருவர் பலி

சுவிட்சர்லாந்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானார்.

சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்திலுள்ள Bellach என்னுமிடத்தில், காய்கறிகள், பழங்கள் மொத்த விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்று உள்ளது.

இந்நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் அந்தக் கட்டிடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.

தகவலறிந்து தீயணைப்புக்குழுவினர் அங்கு வரும் முன், தீ கட்டிடத்தை கபளீகரம் செய்துவிட்டிருக்கிறது.

கட்டிடம் தீயில் முழுமையாக சேதமடைந்துவிட, பொலிசார் மேற்கொண்ட ஆய்வில், அந்தக் கட்டிடத்துக்குள் ஒருவர் உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது.

அவர் யார், எதனால் தீப்பற்றியது என்பது போன்ற விடயங்கள் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு  வருகிறார்கள்.

Bootstrap