பிலிப்பைன்ஸ் நாட்டின் கொரான் கடற்பரப்பில் 'எம்.வி. ஜூன் அஸ்டர்' என்ற பயணிகள் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரபல சுற்றுலாத் தலமான பலவான் மாகாணத்தின் கொரான் பகுதிக்கு அருகே, கரையிலிருந்து சுமார் 2.2 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
கப்பலில் மொத்தம் 134 பேர் பயணித்துள்ளனர்.இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 87 பயணிகளின் நிலை குறித்து தகவல் இல்லாததால், அவர்களைத் தேடும் பணிகளை பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை தீவிரப்படுத்தியுள்ளது.
கப்பலில் தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை; இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கடலோரக் காவல்படையினர் மீட்புக் குழுவினருடன் இணைந்து விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.