களுபோவில பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து கைக்குண்டு தாக்குதல்

களுபோவில – விமலசிறி மாவத்தையில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Bootstrap