| நாள் | வியாழக்கிழமை |
|---|---|
| திதி | சதுர்த்தசி காலை 10.56 வரை பிறகு அமாவாசை |
| நட்சத்திரம் | மகம் பகல் 3.14 வரை பிறகு பூரம் |
| யோகம் | அமிர்தயோகம் பகல் 3.14 வரை பிறகு சித்தயோகம் |
| ராகுகாலம் | பகல் 1.30 முதல் 3 வரை |
| எமகண்டம் | காலை 6 முதல் 7.30 வரை |
| நல்லநேரம் | பகல் 10.15 முதல் 11.15 வரை |
| சந்திராஷ்டமம் | உத்திராடம் பகல் 3.14 வரை பிறகு திருவோணம் |
| சூலம் | மேற்கு |
| பரிகாரம் | தைலம் |
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய படைப்பாற்றல் மற்றும் திட்டமிடல் சாதக பலனை தரும். நீங்கள் விளம்பரத்துறை, மார்க்கெட்டிங்கில் இருந்தால் உங்கள் செயல்பாடு சிறப்போடு, உங்கள் கருத்துக்கு வரவேற்பு கிடைக்கும். புதிய திட்டங்களை தொடங்குவதற்கும், சில விஷயங்களை முறைப்படுத்தி ஆவணப்படுத்தவும் முடியும். உங்களுடைய நிதி நிலையில் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். காதல் விஷயத்தில் வெளிப்படையாக பேசுவது நன்மை தரும். தம்பதியிடையே நெருக்கம் அதிகரிக்கும். இன்று வேலை பளு காரணமாக உடல் சோர்வு, வயிறு சார்ந்த பிரச்சினைகள் சந்திக்க வாய்ப்பு உண்டு.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக சரியான திட்டமிடல் மற்றும் அடிப்படை விஷயங்களை கவனித்து செயல்படுவது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகளை நேர்த்தியாக முடிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவான பேச்சு நேர்மறையான கருத்துக்களை பெற உதவும். தொழில் வட்டாரத்தில் சிறப்பாக செயல்பட்டு கூடுதல் வருமானம் உருவாக வாய்ப்புகள் உண்டு. இன்று உங்களுடைய தேவைகள் மற்றும் மன உணர்வுகளை துணையிடம் தெளிவாக வெளிப்படுத்துங்கள். வரன் தேடக்கூடிய இளைஞர்களுக்கு நல்ல துணை அமையும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றக் கூடிய நபர்கள் சில உடல் அசோகரியங்களை சந்திப்பார்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய சுறுசுறுப்பான செயல்பாடு வேலை மற்றும் தொழில் தொடர்பாக வெற்றியை அதிகரிக்க உதவும். புதிய வேலைக்கான நேர்காணல் அல்லது நிர்வாகப் பணிகள் விஷயத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். இன்று நிலுவையில் உள்ள பணிகளை முடிக்காமல் புதிய பொருட்களை ஏற்க வேண்டாம். வரவு அதிகமாக இருந்தாலும் அனாவசியமான செலவுகளை குறைக்கவும். இன்று குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இது உங்கள் உறவு இடையே பிணைப்பை பலப்படுத்தும். இந்த கண்களுக்கு போதுமான ஓய்வை கொடுக்கவும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். இது உங்கள் வேலையை நேர்மறை ஆற்றலுடன் முன் நோக்கி எடுத்துச் செல்ல உதவும். சமூகம் தொடர்பாக உங்கள் மனித நேயம் வெளிப்படும். உங்களுடைய வாடிக்கையாளர்களே அணுகும் விஷயம் உயர் அதிகாரிகளை ஈர்க்கும்.நிதிநிலை சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனிமையில் இருக்கக்கூடிய நபர்களுக்கு புதிய நட்பு அல்லது திருமணம் தொடர்பான வரன் அமையும். இன்று உங்களுடைய உடல் ஆற்றில் சிறப்பாக இருக்கும் என்றாலும் உங்களுடைய மன நிலையில் சஞ்சலங்கள் ஏற்படலாம்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய திட்டங்களுடன் களத்தில் இறங்கி ஆக்ரோஷமாக செயல்படுவதை விட, பின்னணியில் இருந்து திட்டங்களை வகுத்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் இன்று பிறருக்கு கடன் கொடுப்பது அல்லது அதிக ரிஸ்க் உள்ள விஷயங்களை முதலீடு செய்வதை தவிர்க்கவும். எதிர்பாராத பயணங்கள் செல்ல நேரிடும். இன்று உங்களுடைய துணையின் விருப்பங்களை உணர்ந்து செயல்படவும். சிலர் தூக்கமின்மை அல்லது கண்ணில் எரிச்சல் போன்ற தொந்தரவுகள் சந்திப்பார்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய எல்லா வேலையிலும் கூர்மையான பகுப்பாய்வுடன் செயல்படவும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய கூட்டுப் பணிகள் நல்ல பலனைத் தரும். அரசு அல்லது நிர்வாகம் தொடர்பான வேலைகளில் சிறை தாமதம் ஏற்பட்டாலும் பொறுமையுடன் இருக்கவும். பழைய முதலீடுகள் மூலம் லாபம் பெறுவீர்கள். உங்களுடைய திட்டமிட்ட நிதி மேலாண்மை நல்ல பலனைத் தரும். தம்பதிய இடையே புரிதல் அதிகரிக்கும். காதல் விஷயத்தில் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். இன்று சுறுசுறுப்பாக உணர்வீர்கள். தசை வலி, தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உண்டு.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். உங்களுடைய நிர்வாக திறன் மற்றும் இணக்கமான பேச்சு மேலதிகாரிகளிடம் பாராட்டை பெற்றுத் தரும், தொழில் தொடர்பான வளர்ச்சி திட்டங்களுக்காக மற்றும் புதிய திறனை வளர்த்துக் கொள்ள செய்யக்கூடிய செலவுகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். வேலைப்பளுவிற்கு நடுவில் குடும்பம் மற்றும் காதல் தொடர்பாக நேரத்தை ஒதுக்க திட்டமிடுவீர்கள். சிலருக்கு முதுகு அல்லது முழங்கால் பகுதியில் சில தொந்தரவுகள் ஏற்படும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்யக்கூடிய தொழில் சிறந்த வாய்ப்புகள் கை கூடும். பெரிய பொறுப்புகள் விஷயத்தில் சரியாக கையாள்வது நற்பெயரை பெற்றுத்தரும். நிதி சார்ந்த நீண்ட கால முதலீடுகள் செய்வது நல்லது. மேலும் அனுபவசாலிகளின் ஆலோசனை பெற்ற முதலீடு, செய்வது நன்மை தரும். இன்று ஆன்மீகம் தொடர்பாக நாட்டம் அதிகரிக்கும். உங்கள் துணையுடன் சில முக்கிய விஷயங்களை கலந்துரையாடுவீர்கள். உடலில் நீர் இழப்பு, இடுப்பு பகுதியில் இருக்கும் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று தங்கள் கருத்துக்களை முன் வைக்கும் போது துணிச்சலுடன் செயல்படுவீர்கள். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் பெறுவதில் சட்ட ஆவணங்களை, விதிகளை முழுமையாக ஆராய்ந்து செயல்படுவது நல்லது. பெரிய தொகையை முதலீடு செய்வதை தற்காலிகமாக தள்ளி போடவும். உறவுகள் தொடர்பாக உங்கள் மனதில் இல்ல சந்தேகங்களை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது, அன்புக்குரியவர்களுடன் பொறுமையான பேச்சு உறவை மேம்படுத்த முடியும். செரிமானம் தொடர்பான கோளாறுகள் ஏற்படலாம். சிலருக்கு நெஞ்சு எரிச்சல் தொந்தரவு தரும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று ஆய்வு பணி, கணக்கியல், திட்டமிடுதல் போன்ற விஷயங்களில் சிறப்பாக செயல்படுவீர்கள். தனியாக செய்வது விட சிலருடன் இணைந்து பணியாற்றுவது நல்லது. பணப்புழக்கம் சீராக இருக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து ஒப்பந்தங்களை பெறவும். உங்கள் துணையிடம் இருந்து அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உங்கள் உடலை ஆற்றலுடன் வைக்க தண்ணீரை சரியான அளவு குடிக்க தவறாதீர்கள்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றத்தை காணும் நாள். வாடிக்கையாளர்களே சரியான விதத்தில் அணுகுவது, சமூகப் பணி தொடர்பான செயல்பாடு திருப்தி அளிக்கும். இன்று வருமானம் எதிர்பார்த்த விதத்தில் இருக்காது. இருப்பினும் சேமிப்பை மேம்படுத்த தவறாதீர்கள். உங்கள் துணையிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்க, எல்லா விஷயங்களிலும் குறை கூறுவதை தவிர்க்கவும். அவர்களின் நல்ல விஷயங்களை பாராட்ட தவறாதீர்கள். சிலருக்கு மந்தமான செரிமானம், சளி இருமல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று கற்பனை திறன் மற்றும் நுட்பமான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய வருமான வழிகள் தென்படும். ஆசிரியர் பணி, கலைத்துறை வந்த விஷயங்களில் சிறப்பான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். காதல் தொடர்பான உணர்வு மேலோங்கும். தம்பதியிடையே மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். உணவு விஷயங்களில் கவனம் செலுத்தவும். உடற்பயிற்சி செய்வதும், சரியான அளவு நீர் குடிப்பதை பின்பற்றவும். இன்று புதிதாக கடன் வாங்குவது தவிர்க்க வேண்டிய நாள்.