நாடலி ஹார்ப் உள்ளிட்ட நெருக்கமான உதவியாளர்களுக்கு பணப்பரிசு வழங்கிய டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நெருங்கிய வெள்ளை மாளிகை உதவியாளர்களுக்குப் பெருமளவில் பணப்பரிசுகளை வழங்கியுள்ள விவகாரம் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் தலைமைச் செயலக உதவியாளர் நாடலி ஹார்ப் (Natalie Harp) மற்றும் முக்கிய உதவியாளர்கள் சிலருக்கு கடந்த ஆண்டு விடுமுறை காலப் பரிசாக தலா 45,000 அமெரிக்க டொலர்களை பணப்பரிசாக வழங்கியுள்ளதாக நிதி வெளிப்படைத்தன்மை ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களின்படி, நாடலி ஹார்ப் (Natalie Harp), தொடர்பாடல் ஆலோசகர் மார்கோ மார்ட்டின் (Margo Martin) மற்றும் ஓவல் அலுவலகத்தின் உதவி பணிப்பாளர் சேம்பர்லெய்ன் ஹாரிஸ் (Chamberlain Harris) ஆகியோருக்கு தலா 45,000 அமெரிக்க டொலர் பணமும், வால்ட் நௌடா (Walt Nauta) என்பவருக்கு 20,000 அமெரிக்க டொலர் பணப்பரிசாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையானது அவர்களது அதிகாரப்பூர்வ அரசு ஊதியத்தில் கணிசமான பகுதியாகும்.

இது வழக்கமான சட்ட விதிகளுக்கு உட்பட்டதா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

தமக்கு நெருக்கமான பணியாளர்களுக்குக் கிறிஸ்துமஸ் பரிசு வழங்குவது தனது நீண்டகால வழக்கம் என்று வெள்ளை மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டாலும், இந்தத் தொகையின் அளவு மற்றும் அதன் நடைமுறைகள் குறித்த விமர்சனங்களும் சட்டப்பூர்வமான கேள்விகளும் எழுந்துள்ளன.

Bootstrap