சினிமாவை மிஞ்சிய நிஜ வாழ்க்கை நாடகம் : ரவி மோகனை விளாசிய ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு!

நடிகர் ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, தாங்கள் பிரிவதாக ரவி மோகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, இருவரையும் மீண்டும் இணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், ஆர்த்தி தரப்பில் ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதில், 40 இலட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடுமாறு கோரப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 40 இலட்சம் ரூபாய்க்குப் பதிலாக 3 இலட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "சூர்யா, அஜித், விக்ரம், கமல் இவங்க எல்லோரையும் விட என் வாழ்க்கையில் வந்த ஒருத்தன் நடிச்சானே... நடிப்பு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் டா" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் அவர் யாருடைய பெயரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், அவர் ரவி மோகனைத்தான் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆர்த்தியின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், அவர் குறிப்பிட்ட நபர் யார் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Bootstrap