"இன்றைக்கும் தழும்புகள் இருக்கு..." : சட்டப்பேரவைச் சர்ச்சைக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்!

மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், தனக்கு பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிறைவாசத்தின்போது தாக்கப்பட்டதில் தனது தாடை என்பு உடைந்ததாகவும், அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட தழும்புகள் இன்றளவும் தனது உடலில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைக் கேலி செய்யும் வகையில் சைகை செய்ததாக சர்ச்சை எழுந்திருந்தது.

இந்தச் சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், தனது சிறைவாச காலத்தில் எதிர்கொண்ட கொடுமைகள் குறித்தும், அதனால் ஏற்பட்ட உடல் தழும்புகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Bootstrap