மின்னஞ்சல், பயண திட்டம், கொள்முதல் வரை உங்கள் சார்பில் செய்யும் தனிப்பட்ட AI ஏஜென்டாக ‘Muse’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது Meta.

செயற்கை நுண்ணறிவு துறையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வகையில், Mark Zuckerberg தலைமையிலான Meta புதிய ‘Muse’ தனிப்பட்ட AI ஏஜென்டை அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 8 அன்று அறிவிக்கப்பட்ட Muse, கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் நின்றுவிடாமல், பயனர்களுக்காக நேரடியாக பல்வேறு பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Muse-க்கு ஒரு பணியை கூறினால், அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தானாக மேற்கொள்ள முடியும். உதாரணமாக, மின்னஞ்சல் அனுப்புவது, பயணத்தைத் திட்டமிடுவது உள்ளிட்ட அன்றாட பணிகளை பயனர் சார்பில் செய்ய முடியும். மேலும், பயனரின் உரையாடல்களில் இருந்து முக்கியமான தகவல்களை நினைவில் வைத்துக்கொண்டு, எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப பரிந்துரைகளையும் வழங்கும் என Meta தெரிவித்துள்ளது.

இதற்காக Muse Spark என்ற Meta-வின் மேம்பட்ட AI மாடல் பயன்படுத்தப்படுகிறது. Muse, தனக்கென உருவாக்கப்பட்ட Muse Secure VM என்ற பாதுகாப்பான மெய்நிகர் கணினி சூழலில் இயங்குகிறது. பயனரின் தரவு மற்றும் இணைக்கப்பட்ட சேவைகளின் தகவல்களைப் பாதுகாப்பாக கையாளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் அனுப்புவது அல்லது கொள்முதல் செய்வது போன்ற முக்கியமான நடவடிக்கைகளுக்கு முன்பு பயனரின் அனுமதியையும் Muse கேட்கும். மேலும், எந்தெந்த செயலிகளுக்கு அணுகல் வழங்க வேண்டும் என்பதையும் பயனரே தீர்மானிக்க முடியும். முதற்கட்டமாக அமெரிக்காவில் iOS, Android மற்றும் muse.ai தளங்களில் Muse அறிமுகமாகியுள்ளது.

 

Bootstrap