தெற்கு செங்கடலில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஸூக்கார் தீவின் (Zuqar Island) கட்டுப்பாட்டை ஹூதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படகுகளில் வந்து மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடர்ந்து குறித்த தீவு ஹூதி கிளர்ச்சியாளர்களின் பிடிக்குள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கைப்பற்றலின் ஊடாக, செங்கடலின் கடல்சார் பிராந்தியத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தமது இராணுவ மற்றும் மூலோபாய பலத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.