உன் மகளை நான்தான் வளர்த்தேன்!.. 45 லட்சம் சம்பளம் வேணும்!.. பாட்டி தொடர்ந்த வழக்கு!..

தாத்தா பேரனை வளர்ப்பது.. பாட்டி பேத்தியை வளர்ப்பது என்பதெல்லாம் பழைய காலமாக மாறிவிட்டது. ஏனெனில் தற்போது கூட்டு குடும்பம் என்பதே பெரும்பாலும் குறைந்துவிட்டது. அதோடு சிறியவர்கள் பெரியவர்களை மதிப்பதும் இல்லை. அதேநேரம் சீனாவில் இன்னும் பாரம்பரிய பழக்கங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அங்கு குடும்ப செண்டிமெண்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்..

சீனாவில் Ms Xu என்கிற 60 வயது மூதாட்டி தனது பேத்திய வளர்த்ததற்காக தனது மகனிடம் இந்திய மதிப்பில் 45 லட்சம் ரூபாய் பணம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது.

அந்த மூதாட்டியின் மகன் தனது மகளுக்கு நான்கு வயது இருக்கும் போது மனைவியை விவாகரத்து செய்து விட்டார். அப்போது முதல் கடந்த 14 ஆண்டுகளாக அவரின் தாயார்தான் தனது பேத்தியை வளர்த்துள்ளார்.  ஆனால் சமீபத்தில் அவரின் மகன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதோடு, தனது மகளையும் கைவிட்டு விட்டார்.

அந்த கோபத்தில்தான் ‘உன் மகளை  வளர்த்த எனக்கு சம்பளமாக ரூ.45 லட்சம் பணம் கொடுக்க வேண்டும்’ என மூதாட்டி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். பேத்தியின் எதிர்காலத்தை மனதில் வைத்தே மூதாட்டி இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Bootstrap