மசகு எண்ணெயை அவசரமாக கொள்வனவு செய்யும் சீனா!

சீனாவின் சுயாதீன மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ஈரானிய மற்றும் ரஷ்ய விநியோகங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, மேற்கு ஆப்பிரிக்கா, கனடா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மசகு எண்ணெயை அவசரமாகக் கொள்வனவு செய்ய முற்பட்டு வருகின்றன.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளது.

இதனால், ஹோர்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

இந்நிலையிலேயே சீன நிறுவனங்கள் மாற்று வழிகளில் எண்ணெயைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதன் காரணமாக, சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச ஆற்றல் மாநாட்டிற்கு சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள் பெருமளவில் சென்றுள்ளதுடன், சந்தையில் மசகு எண்ணெய்க்கான கூடுதல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

அதேவேளை, சீனாவின் உள்நாட்டு எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யவும், ஆண்டின் இறுதிக்குள் தமக்கு ஒதுக்கப்பட்ட இறக்குமதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி முடிக்கவும் இத்தகைய அவசர கொள்வனவுகள் தீவிரமடைந்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Bootstrap