நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,377 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி நேபாள-திபெத் எல்லைக்கு அருகே பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கால் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
இதுவரை சுமார் 13,656 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 5,130 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீட்புப் பணிகளின்போது அடையாளம் காணப்படாத 1,147 உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதுடன், டி.என்.ஏ பரிசோதனைகள் மூலம் அவற்றை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.