20 ஆண்டுகளாக ஒரே எண்களைத் தேர்ந்தெடுத்து லொத்தரில் ரூ.1.30 கோடி வென்ற பெண்!

அமெரிக்காவின் மேரிலாண்ட் (Maryland) மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 20 ஆண்டுகளாக ஒரே வகையான எண்களைப் பயன்படுத்தி லொத்தரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார்.

நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு, அவர் வாங்கிய மூன்று 'போனஸ் மேட்ச் 5' (Bonus Match 5) லொத்தரி சீட்டுகள் மூலம் அவருக்கு மொத்தம் ரூ.1.30 கோடி (இந்திய ரூபாய்) பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

தன் நீண்ட நாள் நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ச்சியாக ஒரே எண்களைப் பயன்படுத்தி வந்த இவரின் இந்த திடீர் அதிர்ஷ்டம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

Bootstrap