தெஹிவளையில் கையெறி குண்டு வீச்சுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி, மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுக்க - பஹல போபே பகுதியில் இந்த முச்சக்கர வண்டி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல், தவறான இலக்கில் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் இரு சிறார்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை காயமடைந்துள்ளார்.
விசாரணைகளில், காயமடைந்த நபரின் சகோதரர், திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான படோவிட்ட அஸங்கவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘கொஸ்மல்லி’ என்பவரின் நெறிப்படுத்தலின் கீழ் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.