பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தப்போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்,(Joe Root) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar) வரலாற்று சாதனையை முறியடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரைசதங்கள் (Half-centuries) அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் முதலிடம் பிடித்துள்ளார்.
ஜோ ரூட் 69 அரைசதங்களுடன் முதலிடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 68 அரைசதங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
பாகிஸ்தான் நிர்ணயித்த 130 ஒட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின், ஜோ ரூட் 39 பந்துகளில் 9 நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை பெற்றார்.
இதேவேளை, எட்ஜ்பாஸ்டன் (Edgbaston) மைதானத்தில் 1,000 டெஸ்ட் ஓட்டங்களையும் அவர் கடந்துள்ளார்.
இதன் மூலம் லோர்ட்ஸ் (Lord's ), மான்செஸ்டர் (Manchester) மற்றும் தி ஓவல் (The Oval) ஆகிய மைதானங்களைத் தொடர்ந்து, 4 வெவ்வேறு மைதானங்களில் 1,000 க்கும் மேற்பட்ட டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்த 3 ஆவது சர்வதேச வீரர் என்ற பெருமையை ஜாக்கீஸ் கலிஸ் (Jacques Kallis) மற்றும் ரிக்கி பொண்டிங் (Ricky Ponting) ஆகியோருக்கு அடுத்து ஜோ ரூட் பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 133 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 449 ஓட்டங்களும் பெற்றது.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 453 ஓட்டங்கள் குவித்த நிலையில், 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து எட்டி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஹெடிங்லி (Headingley) மற்றும் லோர்ட்ஸ் ஆகிய இடங்ளைத் தொடர்ந்து எட்ஜ்பாஸ்டனிலும் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இங்கிலாந்து முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.