ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சென்றுகொண்டிருந்த ஈரான் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு மாலுமிகள் படுகாயமடைந்துள்ளனர்.

ஈரானின் குவாசம் தீவு அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், தாக்குதல் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை.

மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பு குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்று அதிகாலை ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap