சென்னை நகரில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அவர் சைகை காட்டுவது போன்ற வடிவிலும், ‘கில்லி’ திரைப்படத்தில் இடம்பெற்ற கபடி வீரர் தோற்றத்திலும் சில விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த சிலைகள் விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி, பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
அதேவேளை, திருவல்லிக்கேணி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளுக்கு ‘மார்க்கெட் ராஜா’, ‘டான் ஆஃப் திருவல்லிக்கேணி’ உள்ளிட்ட சினிமா பாணியிலான வித்தியாசமான பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.
சென்னையின் பல்வேறு வீதிகளிலும் வண்ணமயமான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலைகளைக் காண ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் திரண்டு வருகின்றனர்.