ரஷ்யாவின் சோச்சி மீது உக்ரைன் நடத்திய இரவுநேர தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர்.
ரஷ்யாவின் கடற்கரை நகரமான சோச்சி மீது உக்ரைன் நடத்திய இரவுநேர தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர்.
உக்ரைன் ரஷ்யாவின் கடற்கரை நகரமான சோச்சி மீது இரவுநேர தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
மேலும், இந்த தாக்குதலின் விளைவாக மூன்று வீடுகள் சேதமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ரோஸ்டோவ் பிராந்தியத்தில் 50 ட்ரோன் விமானங்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக ஆளுநர் யூரி ஸ்லியுசர் கூறினார்.
இதற்கிடையில், ரஷ்யா முழுவதும் 399 உக்ரேனிய ட்ரோன் விமானங்களை இடைமறித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.